நட்பு...
ஒரு சொல் ...பன் முகங்கள் ...
உலகம் அறியா வயதில்...தோளோடு தோள் சேர்ந்து
கன்னத்தோடு கன்னம் இழைந்து
மின்னும் கண்கள், மிழற்றும் சொற்கள் கொண்டு...
---குறுகிய நாட்களில் மறந்து போன நட்புகள்...
பம்பரம் சுற்றி, கோலியடிதது, ஓணான் வேட்டையாடி
கிழிந்து தொங்கும் அரை நிஜாரை அருணாகயிற்றில் சொருகி வைத்து
எல்லேய் சாப்பிட வாலே ...என அம்மாக் காரிகள் துரத்தும் போது
யாரோ வீட்டில் சாப்பிட பொழுதுகளில், இறுகிய எச்சில் நட்புகள் ...
கண்களில் லேசாக கள்ளமும் பயமும் சேர்ந்து,
உதட்டின் மேலே அரும்பிய பூனை மயிரை ஆசையாய் தடவி கொண்டு
அக்காள் மகளையும் அடுத்த வீட்டு பெண்ணையும்
திருட்டுதனமாய் ரசித்து, பள்ளிக்கு போகாமல் ஊரைச் சுற்றி,
துண்டு பீடி பிடித்து, துடைப்ப கட்டையால் அம்மாவிடம் அடி வாங்கி
கெக்கே பிக்கே என்று சிரித்து மகிழ்ந்தது ஒரு நட்பு...
உடலில் உரம் ஏறி, ஊருக்கு பயம் காட்டி,
தாவணியில் போகும் பெண்ணின் கை பற்றி அருகிழுத்து,
கூட பிறந்தவளின் காதலுக்கு கம்பெடுத்து,
புதிய சினிமா வரும்போதேல்லாம் கல்லூரியில் காரணமில்லாமல்
போராட்டம் அறிவித்து, அப்பாவின் எரிக்கும் விழிகளை தைரியமாக
எதிர்கொண்டு கூட்டம் கூட்டமாய் அடாவடிகள் செய்து
எல்லாம் அடங்கி கல்லூரி இறுதி நாட்களில்
பகல் தூங்கி இரவெல்லாம் டீ குடித்து முடிந்ததை படித்து
பக்கம் பார்த்து பரீட்சை எழுதி பாஸ் ஆனதும்
வாயெல்லாம் பல்லாக இறுக்கி கட்டி அணைத்து கொண்டதும் ஒரு நட்பு...
வசந்த காலம் முடிந்ததும் வேலைக்கு போகும் காலம் வந்து சேர
கேள்வியாய் பார்வைகள் குதற, வேலைக்கு விண்ணப்பித்து விண்ணப்பித்து
சோர்ந்து போய், டீ கடை வாசலில் சிகரெட்டால் யாகம் வளர்த்து,
யாரோ ஒருவன் வேலை கிடைத்து போனால் அவனை வாழ்த்தி அனுப்பி,
காதலித்தவளும் கல்யாணமாகி போய், அவளுக்கு பிள்ளை பிறக்கும் வரை
தாடி வளர்த்து, ஒரு வழியாய் வேலை கிடைத்து
நானும் மனிதன் தாண்டா என்று தலை நிமிரும் வரை கூட இருந்த நட்புகள்...
மனம் மாறி மணம் புரிந்த பின்பு
காலத்தின் ஓட்டத்தில் அதன் அடுத்த கட்ட விளையாட்டில்
பழைய மனிதர்கள் பிரிந்து போய்
ஏங்க என்றும்,மாப்பிள்ளை என்றும், அப்பா என்றும்
புதிய உறவுகள் கிளை விட்டு வளர்ந்து,
மண் மிதித்து, மண் மறந்து,
வேலை, வீடு, மனைவி, மக்கள் என்று எல்லாம் மாறிப்போய்
புதிய நண்பர்களும் தோன்றி...
இதோ இந்த நண்பர்கள் நல்லவர்கள் ஆனால்
இவர்கள் ஓர் எல்லைக்கு உட்பட்டவர்கள் ...
தன்னை ஒரு வட்டத்தில் நிறுத்திக்கொண்டு
வெளியே நட்பு வளர்ப்பவர்கள்...
வெட்கி நாணத்துடன் தனை அழைத்த மனைவியும்
விவரங்கெட்ட மனிதன் என்று உரிமையுடன் பேச,
இந்த ஆளுக்கு வேற வேலை இல்லை என்று
பெற்ற பிள்ளைகள் ஏச, தனக்குள் ஏதோ புரிந்தும் புரியாமலும்
மனத்தால் சற்றே விலகி
ஏகாந்தமாய் தனி இடத்தில அமர்து வானம் வெறிக்கும் போது
கூட நின்று பொக்கை வாயில் வேர்கடலை மென்று
பழைய நினைவுகளோடு ஒரு நண்பர் கூட்டம்...
தனியாய் வந்தவன் தனியாய் தான் போக வேண்டும் என்பது விதி இல்லையா...
உடல் சுற்றி நின்று ஒரு ஒருவரும் ஒன்றொன்று பேசி
அழுதும் சிரித்தும் மயானம் வந்து
எரிந்து போனான் இன்னொருவன் என்று தத்துவம் பேசும்போது...
அவன் சிரித்தான் ...
நட்பாம் நட்பு....

No comments:
Post a Comment